பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. அமர்நீதி நாயனார் (50) ஆனி-பூரம் (1) திருக்கோயில்-திருமடங்களில் தொண்டு செய்யும் அடியார்களுக்கு உடை வழங்குதல்
4. அரிவாட்டாய நாயனார். தை-திருவாதிரை (1) திருமடைப்பள்ளி தூய்மை செய்தல், பழுது பார்த்தல்
(2) திருமடைப்பள்ளிப் பாண்டங்கள் (பாத்திரங்கள்).

(அ) சரிபார்த்தல் (ஆ) பழுது பார்த்தல் (இ) தேவைக்கு வாங்குதல்

(3) திருவமுதுத் திட்டம் சரிபார்த்தல்-சீர் செய்தல்
(4) திருமடைப்பள்ளியில் பணிசெய்பவர்களுடன் கலந்துரையாடுதல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்
(5) இறைவனுக்குச் சிறப்புத் திருவமுது செய்வித்து வழிபாடு செய்தல்-(மாவடு சேர்த்தல்).
5. ஆனாய நாயனார் கார்த்திகை அத்தம் (1) இசைக் கருவிகள் (மேளம், சங்கு, மணி, நகரா, அத்தம். புல்லாங்குழல் முதலியன பற்றி ஆய்தல் - சீரமைத்தல்.
(2) தேவைக்குப் புதியன வாங்குதல்.
(3) திருக்கோயில்-திருமடத்தில் இசைத் துறையில் பணிசெய்பவர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.