பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

11

வழக்கமும் தொலைந்து உண்மையான உழைக்கும் வர்க்கம் சுதந்திரம் அடையவேண்டும் என்ற கருத்தினைக் கூறுகின்றான்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்—வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்! என்று உழைக்காமல் ஊரை ஏமாற்றித் தின்போரைச் சாடுகின்றான். அவ்வாறு பெற்ற சுதந்திரம் வீணர் அதிகார ஆட்சியில் சிக்கிவிட்டால் அது விழலுக்கு இறைத்த நீராகி விடும் என்பதை உணர்த்துகின்றான்.

விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம்–வெறும்
     வீணருக்கு உழைத் துடலம் ஓயமாட்டோம்.

எல்லோரும் ஒன்றென்னும்
      காலம் வந்ததே-பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற
      காலம் வந்ததே-இனி
நல்லோர் பெரிய ரென்னும்
      காலம் வந்ததே-கெட்ட
நயவஞ்சக் காரருக்கு

      நாசம் வந்ததே!

என்று ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டத்துக்குச் சாபம் இடுகின்றான்.

சுதந்திரப் போராட்டம் வெள்ளைக்காரனை எதிர்த்துத் தொடங்கியது. அன்னியனாகிய பரங்கியனை நம்நாட்டை விட்டு அப்புறப்படுத்துவதற்காகத் தொடங்கியது. வெள்ளையனே வெளியேறு எங்கள் நாட்டை நாங்களே ஆள்வோம் என்று பாரத வீரர்கள் ஆர்ப்பரித்து அறப்போர் நடத்திய காலத்தில் சுதந்திரப்பள்ளு எப்படிப் பிறந்திருக்க வேண்டும். முற்றிலும் வெள்ளையனைச் சாடியிருக்கவேண்டும் அல்லவா?