பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

25

பாரதியும் பாரதிதாசனும் புதுமையைப் படைத்தார்களே தவிர, புதுக்கவிதை என்ற கோணல் கவிதைகளைப் படைக்க வில்லை.

அவர்கள் கருத்தில் புதுமையிருந்தது: கற்பனையில் புதுமையிருந்தது; இலட்சியத்தில் புதுமையிருந்தது; எதையும் எடுத்துச் சொல்லும் போக்கில் புதுமையிருந்தது. புதுமை என்ற பெயரால், பொருந்தாக் கூற்றுகளையும் புல்லிய கருத்துகளையும், வடிவில் அடங்காத துண்டங்களையும் பிண்டங்களையும், பெய்து கழியும் பித்தர் இதனை யுணர வேண்டும.

குயில் பாட்டிலும், சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலும் காணப்படும் கலிவெண்பாக் கண்ணிகள் நெஞ்சில் ஒட்டிக் கொள்ளும் கவிதை வரிகளாய் உள்ளன.

அவற்றின் நயங்களை இனிக் கூறு கூறாய் ஒப்பிட்டுப் பார்ப்போம்!