பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

குயிலும்...சாரலும்

வாய்ப்புண்டே தவிர முன்னேற்றம் அடைய வாய்ப்பில்லை என்பதை அழகாக, இலக்கிய நயத்தோடு எடுத்துக் காட்டுகிறது சாரல்கதை.

எதையும் நம்பும் குப்பன்-நாட்டில் இராமாயணம் போன்ற நலிவு தரும் கதை இருப்பதை அறியாத, நாட்டுணர் வில்லாத குப்பன்-வஞ்சியால் திருத்தப்படுகிறான். வஞ்சியிடம் காதல் கொண்ட குப்பன், தெளிந்த மனம் படைத்த வஞ்சியால் புது மனிதனாகிறான்.

இராமாயணக் கதையிலே கம்பன் திறமை முழுவதும் வெளிப்படுகிறது. நூற்றுக் கணக்கான சந்த விருத்தங்களைப் பாடிய கம்பன், கவியுலகிலே கொடி கட்டிப் பறக்கிறான். பாத்திரப் படைப்பில் அவன் செய்த புதுமை கண்டு பாரெலாம் வியக்கிறது. அவன் கையாண்ட உவமைகள் சொல்லாட்சிகள், கவிதா முத்திரைகள் அனைத்தும் அவனுக்குப் புகழ் சேர்க்கின்றன. ஆனால் அவன் எடுத்துக் கொண்ட கதை இராமாயணம். அந்த இராமாயணம் சிறந்த இலக்கியமாக மதிக்கப்படலாம். ஆனால், நாட்டில் மூடத்தனம் வளருவதற்கு அடிப்படையான ஒரு பழம் குப்பையான கதையாக இருந்துவிட்ட காரணத்தால், கம்பன் கடைசிவரை பழிப்புக்கு ஆளானவனாக இருக்கிறான் . அறிவுலகம் அவனை இந்த நாட்டுக்குத் தீமை செய்தவனாகவே கருதுகிறது. அப்படிப்பட்ட தீய கதையின் கருத்தை எடுத்துக் காட்டி, அதுபோன்ற கதைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, காலத்துக்கேற்ற புத்திலக்கியம் படைக்க வேண்டிய இன்றியமையாமையை எடுத்துக் காட்டிப் படைத்த புதிய இலக்கியத்தின் முன்னோடிதான் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.

பாவேந்தர் பாரதிதாசன் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் கதையைப் படைத்ததன் மூலம் புத்துணர்வு கொண்ட இளம் உள்ளங்களிலெல்லாம் நிலையாக வாழும் இலட்சியக் கவிஞராகத் திகழ்கின்றார்.