பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Č. முருகுசுந்தரம்/l5

திருவிழாவுக்கு அளவுகடந்து மக்கள் கூடுவர். ஆடை எதுவுமின்றி இடுப்பில் வேப்பிலை மட்டும் சுற்றிக் கொண்டு பட்டிக்காட்டு ஆடவரும் பெண்டிரும் கோவி லைச்சுற்றி உருளுதண்டம் போடுவர். இந்த அநாக ரிகத்தைக் கண்டு சகிக்காத பாவேந்தர் ஒருநாள் தம் நண்பர்களோடு ஒரு பெரிய காரில் பெரியபாளையம் புறப்பட்டார். டாக்டர் மா. இராஜமாணிக்கனார், சம னர் பூரீபால் ஆகியோர் உடன் வந்தனர். நானும் சென் றேன். அடையாறு மாணவிகள் சிலரும் எங்களுடன் வந்திருந்தனர். அங்கு பலியிடப்படும் ஆடு கோழிகளின் குருதி வாய்க்காலாக ஓடும். உயிர்ப் பலியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சமணரான பூரீபால் எங்களுடன் கலந்து கொண்டார்.

நாங்கள் அம்மன் கோவிலுக்கு அருகில் கூட்டம்போட் டோம். பூரீபால் உயிர்ப் பலி கூடாது என்று கூறி அரு ளறத்தின் இன்றியமையாமையை எடுத்துரைத்தார். 'பக்தி என்றால் என்ன என்பதைப் பற்றியும். அம்மன் பற்றிய விளக்கத்தையும் 184 புராணங்களிலிருந்தும் மேற்கோள் காட்டி விளக்க முடியும். நிர்வாணமாகக் கோவிலை வலம் வரவேண்டும் என்று எந்தப் புராண மும் எடுத்துரைக்கவில்லை. ஆண்டவன் பேரால் உயிர்ப் பலி வேண்டாம்' என்று பாவேந்தர் உருக்கமாகவும், உணர்ச்சி ததும்பவும் பேசினார். உடன் வந்த அடை யாறு மாணவிகள், நிர்வாணமாக கோவிலைச் சுற்றிய பெண்களைப் பார்த்து, ஆடை அணிந்து கோவிலை வலம் வரும்படி வேண்டிக் கொண்டனர்.

கூட்டத்தில் இருந்த சிலர், "நிர்வாணமாகக் கோவி லைச் சுற்றுவது எங்கள் விருப்பம், நாங்கள் வேண்டு தலை நிறைவேற்றுவதற்காகச் செய்கிறோம். அதைக் கேட்க நீங்கள் யார்?' என்று கேட்டனர்.

தமிழ் நாட்டின் மானம் காற்றைப் போலவும், தண் னீைர் போலவும் எல்லார்க்கும்; பொதுவானது. அதைக்