பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 குயில் கூவிக்கொண்டிருக்கும்


இப்படித்தான் தமிழில் உள்ள பல தூய சொற்றொடர் கள் பிற மொழியாளரால் கவர்ந்து செல்லப்பட்டு, உரு மாறி வட சொல்லென்று நம்மிடையே திணிக்கப்படுவதும், அக் கூற்றினை ஏற்று இங்குள்ள முண்டங்கள், கூத்தாடுவதும் இன்று கொடுஞ்செயலாயிற்று. 'நிருத்தம்’ என்ற சொல் ஆடலைக் குறிக்கும். ஆடும்போது வெளியிடும் முத்திரைகள் உள்ளத்தின் கூறுகளை வெளிக்கொணர்ந்து நிறுத்திக் காட்டுவதால் நிறுத் தம்' என்று குறிக்கப்பட்டுப்பின் 'நிருத்தம்' ஆயிற்று. ஆடல் புரியும் ஒருத்தி கை, கண் , வாய், மெய், முகம் ஆகியவற்றில் தன் அகக் குறிப்புகளைக் காட்டி நிறுத்துதல் இயல்புதானே. இத்தூய தமிழ்ச் சொல்லை 'நிர்த்தனம், நர்த்தனம்’ என்று பாழ்படுத்தி வடசொல்லாக மாற்றிக் கொண்டுவந்து கூறுவார் கூற்றைக் கேட்டுத் திரியும் தமிழ்த் தறுதலைகளை உதைத்தாலென்ன?” என்று கூறி எதிரிலிருந்த ஒலி பெருக்கியை எட்டி உதைத்தார். அது இன்னும் என் மனக்கண் முன்னே காட்சியளிக்கிறது.

இத்தகைய உணர்ச்சிப் பெருக்கான மாநாட்டில் கலந்து கொண்டு ஊருக்குத் திரும்பிய எனக்குப் புதியதோர் உணர்ச்சி பிறந்தது. தமிழில் பிறழ்ந்த,மறைந்த இசைப் பண்களையெல்லாம் ஆய்ந்தறிந்து தக்கதோர் இசை வளம் தமிழுக்குப் படைக்கவேண்டும் என்ற ஆர்வம் என்னை ஆட்கொண்டது. நாங்கள் ஏறிவந்த புகை வண்டி கரூரைத் தாண்டிக் கொண்டிருந்தது. உள்ளத்தில் ஏற்பட்ட என் புதிய ஆவலைப் பாவேந்தரிடம் புக லத் தலைப்பட்டேன்.

'நானும் தங்களைப்போல் இசைப்பாடல்கள் இயற்றி இசைக்க ஒரு வழியைக் காட்டுங்கள்’’ என்றேன்.

பாவேந்தருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 'அடா! பாடகனெல்லாம் பாவலனாக மாறினால் இசையுலகத்தை யாரப்பா காப்பாற்றுவது? தமிழ்ப்பாட்டே தலையெடுக்