பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> முருகுசுந்தரம்|49

மெங்கும் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தன. இந்திரஜித் வேடத்தில் நடிக்கச் சின்னப்பாவும், சுலோ சனா வேடத்தில் நடிக்க கே.எல்.வி. வசந்தாவும் புக் செய்யப்பட்டிருந்தனர். சின்னப்பரவுக்குரிய தொகை ரூ. 50,000. முன்பணமாக ரூ. 10,001 அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

சுலோசனா திரைப்படமாக எடுத்த நேரத்தில் திராவிட இயக்கம் வலுவாகத் தமிழ்மண்ணில் வேரூன்றிக் கொண்டிருந்தது. திராவிட இயக்கத்தின் வளர்ச்சியால் தமிழ் விரைந்த மறுமலர்ச்சியைப் பெற்றுக் கொண்டி ருந்தது. இராவணன், இரணியன், இந்திரஜித்போன்ற இதிகாசப் பாத்திரங்கள் தமிழ் வீரர்களாக மக்கள் முன் நிறுத்தப்பட்டனர். மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமை யாளர் டி. ஆர். சுந்தரம் இங்கிலாந்தில் படித்துப் ناپا டம் பெற்றுத் திரும்பியவர்: ஆங்கில மாதைத் திரு மணம் செய்து கொண்டு மேலை நாட்டுப் பாணியில் வாழ்ந்து கொண்டிருந்தவர். என்றாலும் அவருக்குத் தமிழ் இலக்கியங்களில் அலாதியான பற்றும் ஈடுபாடும் உண்டு. ஐம்பெருங்காப்பிய வரிசையைச் சேர்ந்த குண் டலகேசியையும். வளையாபதியையும் வெற்றித் திரைப் படங்களாக எடுத்து வெளியிட்ட பெருமை அவரையே சாரும். சுந்தரம் பிள்ளையின் மனோன்மணிய நாட கத்தையும் திரைப்படமாக்கினார். அன்று புரட்சிகர மாகவும், விறுவிறுப்போடும் எழுதிய கலைஞர் கருணா நிதியையும், கவிஞர் கண்ணதாசனையும் ஆதரித்து வளர்த்தவர் இவரே!

இந்திரஜித்தின் வீர வாழ்க்கையை நல்லதோர் திரைப் படமாக உருவாக்கவேண்டும் என்பதில் டி.ஆர்.எஸ். மிக்க ஆர்வம் காட்டினார். பாவேந்தரும் அப்படத்துக்கு உணர்ச்சிததும்ப வசனம் எழுதியிருந்தார். வரலாற்றுக் கதாநாயகனாகவும், புராணக் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்துத்தம் திறமைக்கு முத்திரை குத்திக் கொண்டிருந்த சின்னப்பா இந்திரஜித்தாக நடித்தால்