பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. முருகுசுந்தரம்/8!

அவளை அலங்கரித்தேன். கண்ணப்பர் வந்தார்; பெண் ணுக்கும் பிடித்தது. பெண்ணும் கண்ணப்பர் கண்ணுக்கு பிடித்தது. திருமணம் உறுதி செய்யப்பட்டது.

மாப்பிள்ளை கண்ணப்பர் கரூருக்குப் பக்கத்தில் உள்ள கட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர். நிலபுலன்களோடு கூடிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒரே பிள்ளை. அவர்களுடைய பதிவுத் திருமணம் திருச்சியிலும், பாராட்டுக்கூட்டம் கட்டிப் பாளையத்திலும் நடைபெற் றது. பாராட்டுக் கூட்டத்துக்குச் சேலம் நகராட்சிக் கல் லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர் தலைமை தாங்கி னார். பெரியாரும், அறிஞர் அண்ணாவும் வேறு பல இயக்கத் தலைவர்களும் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித் தனா.

இத்திருமணத்தில் நடைபெற்ற வரலாற்றுப் புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டுப் பெண்ணுலகுக்கு நான் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். பாவேந்தர் மூத்த மகள் சரசு தந்தையிடம் அதிக ஈடுபாடு கொண்டு அவருக்குப் பணிவிடைகள் புரிந்தவள். ஒரு வீட்டில் ஆண்கள் எவ்வளவு சீர்திருத்தக்காரர்களாக இருந்தா லும் பெண்கள் கட்டுப்பெட்டிகளாகவே இருப்பர். அவர் களுக்கு அடுப்பே திருப்பதி, ஆம்படையானே குல தெய் வம்! வேறு சமுதாயச் சிந்தனைகள் அவர்களை அவ் வளவாக பாதிப்பதில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டுச் சீர்திருத்தச் சிந்தனையில் ஈடுபட்ட தமிழ்நாட்டுப் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்பெண் களில் சரசும் ஒருத்தி.

திருமணத்துக்கு முன்பு தாலி செய்வதைப் பற்றிப் பேச்சு எழுந்தது. உடனே சரசு என்னைப் பார்த்து ஏன் அத்தை! நான் என்ன மாடா? முனிசிபாலிடியில் கட்டு

| மஞ்சுளாபாயைப் பாவேந்தர் மக்கள் எல்லாரும் அத்தை என்றே

அழைப்பர்