பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to முருகுசுந்தரம்/87

-என்பது பாவேந்தர் தலைப்பு. நான் வரவேற்புரை நிகழ்த்தினேன்.

முத்தமிழ்க் காவலர் முதலில் பேசின்ார்: பேசி முடித்த தும் நான் சைவன்? எனக்கு முதலில் சோறு போடு” என்று சொல்லிவிட்டுச் சாப்பிடப் போய்விட்டார். அவர் புறப்பட்டுப்போனதும், 'கி.ஆ.பெ. விசுவநாதம் அணா பைசா கணக்குப் பார்க்கக் கூடியவர். நான் என்ன பேசி விடுவேனோ என்ற பயம். அதனால் தான் முன்னா லேயே புறப்பட்டு விட்டார்’ என்று கூறினார் பாவேந் தர். மதுரை வந்தால் தொடர்ந்து 15 அல்லது 20 நாள் என் வீட்டில் தங்கியிருப்பார். என்னை அவருடைய மகனாகப் பாவிப்பார். வீட்டிற்குள் நுழைந்ததும் என் மனைவி யைப்பார்த்து தம்பி வந்துட்டானா? என்று பரிவோடு கேட்பார். என்னைக் கண்டதும் அய்யா! வாய்யா!' என்று அன்பொழுகக் கூப்பிடுவார். பாவேந்தர் மதுரை யில் இருக்கிறார் என்ற செய்தி தெரிந்தால் எப்போதும் என் வீட்டில் பத்து இருபது பேர் கூடிவிடுவர். எல்லா ருக்கும் விருந்து நடக்கும். மீன், கறி, புறா சூப் விரும்பி அவர் உண்ணும் உணவு கள். ரசத்திலே மோர்விட்டுக் குடிப்பார்; முட்டை நிறையச் சாப்பிடுவார். இரவில் கடுக்காக மிளகு ரசம் கேட்பார். இடியாப்பம் அவருக்கு நிறையப் பிடிக்கும். இந்தோ-சிலோன் ஒட்டலுக்கு அடிக்கடி போவோம். அங்கு கைம்மா விரும்பிச் சாப்பிடுவார். என் மனைவி டோக் பெருமாட்டி கல்லூரியில் தமிழ் இலக்கியப் பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தாள். பாவேந்தரைக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று பேச வைக்க வேண்டும் என்பது அவள் விருப்பம். கல்லூரி யிலிருந்து அழைக்க வந்தனர். பிற்பகல் 4-30 மணி வரை மறுப்பு. அதற்குமேல் ஒப்புக்கொண்டு பேசப் புறப் பட்டார்.