பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. முருகுசுந்தரம்/91

பாவேந்தர் வயிற்றோட்டத்தோடு மதுரை வந்தார். டாக்டர் மா. இராசமாணிக்கனார் அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார். மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஊசி போட்டோம். வயிற்றோட்டம் குறைந்தது; நிற்கவில்லை. டாக்டர் காமேஸ்வரனி டம் சீட்டு வாங்கிக் கொஞ்சம் பிராந்தி வாங்கிக் கொடுக்கச் சொன்னார். "எனக்கு ஊசி வேண்டாம். கொஞ்சம் குடிச்சாச் சரியாப் போயிடும்’ என்று பல தடவை குழந்தை போலக் கேட்டார்.

  • மதுவா! அது மட்டும் உங்களுக்கு நான் வாங்கிக் கொடுக்க மாட்டேன். என் அப்பா குடியாலயே என்

குடும்பத்தைக் கெடுத்தார்' என்று சொல்லிக் கட்டாய மாக மறுத்து விட்டேன்.

'சரி சரி! டிக்கெட் வாங்கிக் குடு. நான் ஊருக்குப் போறே" என்று கோபமாகக் கேட்டார். வாங்கிக் கொடுத்தேன். ஊருக்குப் புறப்பட்டு விட்டார்.

பாவேந்தர் கடைசியாக மதுரை வந்த போது மனைவி யோடு வந்தார். பழனியம்மாள் மீனாட்சியம்மன் கோவிலைப் பார்க்க வேண்டும் என்று கேட்டார் பாவேந்தர் என்ன சொல்லுவாரோ? என்ற அச்சம் எனக்கு. அப்பாt அனுமதி கொடுத்தால்தான் அழைத் துப் போவேன்' என்று சொல்லிவிட்டுப் பாவேந்தர் முகத்தைப் பார்த்தேன். - * அழைச்சுப் போ! என்னை ஏன் பாக்கற. இவ ஒரு சாமியை விடமாட்டா. எத்தனை தூணுன்னு எல்லாத் தூணையும் எண்ணிட்டு வந்திடுவா. எல்லாத் தூணை யும் காட்டு' என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பாவேந்தர். அதன் பிறகு தான் நான் அழைத்துச் சென் றேன்.

f சுவாமிநாதன் பாவேந்தரை அப்பா என்று தான், அழைப்பது

வழககம்.