பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிமலையைப் போல் எதிர்ப்புகள் குமுறி எழுந்தாலும், வெள்ளம்போல் பகைவர் கூட்டம் துள்ளி வந்தாலும், சிறிதும் நிலைகுலையாத நெஞ்சுரம் பெற்றவனாகக் கவிஞன் இருக்க வேண்டும். ஆங்கில நாட்டு இலக்கிய வரலாற்றில் இதற்கு உணர்ச்சிமயமான ஓர் எடுத்துக் காட்டு உண்டு. கி. பி. 16-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆட்சிபுரிந்த புகழ்பெற்ற மன்னனான எட்டாம் ஹென்றி மதத்துறையில் இருந்த போப்பின் மேலாதிக்கத்தை ஒழித்துக்கட்டி, எதிர்ப்பு மதத்தை (Protestant church) நிறுவினான். அவனுக்குப் பிறகு பட்டமேறிய அவன் மகள் முதலாம் எலிசபெத்தும், பிராட்டெஸ்டண்ட் மதத்தையே தழுவியிருந்தாள். ஆனாலும் பி ர ஞ் சு நாட்டைச் சேர்ந்தவனும், கத்தோலிக்கப் பிரபு வா ன அஞ்சு கோமகனை (Duke of Anjou) அவள் மணக்க இருப்பதாக ஒரு வதந்தி நாடெங்கும் பரவிற்று. பிராட்டெஸ்டண்ட் மதத்தைச் சேர்ந்தவர்களான இங்கிலாந்து மக்களுக்கு இந்தத் திருமண ஏற்பாடு பிடிக்கவில்லை.

ஜான் ஸ்டப்ஸ் (John Stubbs) என்ற அறிஞன் இந்தத் திருமண ஏற்பாட்டைக் கண்டித்து விழுங்கத் திறந் திருக்கும் கடல் வாயின் கண்டுபிடிப்பு (The Discoveries of a Gaping Gulf) என்ற பிரசுரம் ஒன்றை எழுதி வெளியிட் டான். பிரெஞ்சு நாட்டுக் கத்தோலிக்கக் கோமகன் ஒருவனை இங்கிலாந்தின் அரசி திருமணம் செய்து கொள் வதால் இங்கிலாந்து நாட்டில் பரவியிருக்கும் பிராட்டெஸ் டண்ட் மதத்துக்கு வரும் கேடு பற்றியும் அவமானம் பற்றியும் அக்கட்டுரையில் ஜான் ஸ்டப்ஸ் ஆணித்தரமாக அலசி ஆராய்ந்திருந்தான். இந்த பிரசுரம் இங்கிலாந்துப் பேரரசி எலிஸபெத்தின் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத் தியது. அந்தப் பிரசுரத்தை எழுதிய ஜான் ஸ்டப்ளின் வலது கையை வெட்டிவிடும்படி அரசி ஆணை பிறப்பித்தாள். அத்தண்டனை வெஸ்ட்மினிஸ்டர் சந்தை வெளியில்

20