பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையில் பெரிய சம்பிரதி (தலைமைக் கணக்கர்) யாகப் பணிபுரிகிறார். இளமையும் அழகும் மிக்க தாயுமானவர் மீது மீனாட்சிக்குக் காதல் ஏற்படுகிறது. அவள் தனது காதலை வெளிப்படுத்திய போது, தாயுமானவர் மறுக் கிறார். அவளைக் கண்டிக்கவும் செய்கிறார். காதல் வயப்பட்ட மீனாட்சி,

பளிங்குதனைக் கரைத்ததுபோல் இருக்கும் நீரின்

பாசியென்றே ஏசியெனைப் பேசினாலும் அளவுக்கே அடங்காத ஆசை யென்னை

அங்குமிங்கும் இழுக்கிறதே என்ன செய்வேன்! வளைவுதனை முடிப்பதில்லை புருவம்; எல்லாம் வாழ்நாளில் நிறைவேறி விடுவ தில்லை. பிளவுபடும் இயல்புடைய உளுந்தின் கூட்டம்

போன்றவர் அன்றோபுவியில் வாழும் பெண்கள்! என்று கூறி மன்றாடுகிறாள். பெண்களைப் பிளவுபடும் உளுந்தின் கூட்டம்' என்று சுரதா ஏன் குறிப்பிடுகின்றார் என்ற காரணம் தெளிவாகப் புரியவில்லை. வினை, பயன், மெய், உரு என்ற உவமை வகையில் எதைச் சேர்ந்தது இது என்றும் புரியவில்லை. உளுந்து மட்டுமா பிளவு படுகிறது? எல்லாப் பருப்பு வகைகளுந்தான் பிளவுபடு கின்றன. உளுந்தை மட்டும் இங்கு அவர் ஏன் குறிப்பிடு கிறார்? படிப்பவர்கள் குழப்பமடைகிறார்கள். -

வன்னிய வீரன் காப்பியத்தில் பஞ்சணைப் பறவை வேசி குப்பாச்சியை அறிமுகம் செய்யும் கவிஞர்

வேசி குப்பாச்சியோர் விளம்பர விளக்கு பாவின் இனத்தைச் சேர்ந்த பரத்தை என்று குறிப்பிடுகிறார். 'பரத்தையைப் பாவின் இனத்தைச் சேர்ந்தவள்’ என்று குறிப்பிடக் காரணம் என்னவென்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை; குழம்புகிறோம். வேற்றுத் தளைவிரவ நடக்கும் பா என்று சொன்னால் கூட ஓரளவு பொருத்தமாக இருக்கலாம்.

69