பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சார்ல் போதலேர்

எட்கார் ஆலன்போ என்ற அமெரிக்க எ ழு த் தா ள ரி ன் படைப்பின் மீது போதலேருக்கு அளவு கடந்த ஈடுபாடு உண்டு. இலக்கியத் துறையில் அவரைத் தம் குருவாகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டார். அதோடு நின்றிருந் தால் பரவாயில்லை: அவருடைய பழக்கங் களையும் ஏற்றுக் கொண்டார்.

ஆலன்போ ஒரு அபின் பிரியர்; போதலேர் கஞ்சாப் பிரியர். அபினும் கஞ்சாவும், பயன்படுத்துபவரைத் துளக்கத்தில் ஆழ்த்து வதில்லை; அவர்கள் உள்ளத்தில் ஒருவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தி, விரும்பி ஏற்றுக் கொண்ட கனவு நிலைக்கு ஆட்படுத்து கின்றன. அவற்றைப் பயன்படுத்தியவுடன் அவர்கள் உள்ளம் எ ந் த ப் போக்கில் பயணம் செய்கின்றதோ, அந்தப் போக் கிற்கு அவர்களை எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் செலுத்துகின்றன.

கஞ்சா மயக்கம் ஏற்படுத்தும் குழப்பமான அற்புதம் பற்றிப் போதலேர், பின் கண்ட வாறு குறிப்பிடுகிறார்: "கஞ்சாப் போதை யின் துவக்கத்தில், வழக்கத்திற்கு மாறான வண்ணத்தின் ஆதிக்கம் நமக்குப் புலப்படும்,

87