பக்கம்:குறள் நானூறு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனக்கு அமைந்த துணைவர்களால் உண்டாகும் நலம் ஆக்கத்தைத் தரும். ஆனால், தான் செய்யும் தூய்மையான வினைதான் விரும்பிய எல்லாவற்றையும் தரும். எனவே, துணைநலத்தை விட வினேநலம் சிறந்தது. 2 : 6

இத்தகைய இழிவான செயலைச் செய்தோமே என்று தனக்குத் தானே இரங்குவதற்குக் காரணமான செயலைச் செய்யக்கூடாது. தவறிச் செய்துவிட்டால் மீண்டும் அதுபோன்ற துய்மையில்லாத செயலைச் செய் யாது விடுதல் நவம். 217

தூய்மையற்ற செயல்கள் என்று நல்லவரால் விலக்கப்பட்டவைகளேத் தம் செயலிலிருந்து விலக்கி நீக்கவேண்டும். நீக்காமல் செய்தவர்க்கு அவை நிறை வேறிலுைம் முடிவில் தாழ்வையே தரும். 218

பிறர் மனம் கலங்குமாறு பழிச்செயலைச் செய்து பெற்ற பொருள் எல்லாம் தன் மனம் கலங்குமாறு போய்விடும் தூய்மையான செயலோடு நல்ல நெறி யில் வந்த பொருள்களை இழந்தாலும் பின் நன்மை யைப் பயந்தே தீரும். 2 19

சுடப்படாத பச்சை மண் குடத்தில் நீரை ஊற்றித் தேக்கிவைத்திருந்தால், மண் கரைநது நீரும் ஒடிவிடும். அதுபோன்று துாய்மையில்லாத வஞ்சனைச் செயல்களைச் செய்வதால் பொருளே ஈட்டிச் சேர்த்துப் பாதுகாத்தல் இழப்பையே தரும். 22 y

90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/102&oldid=555599" இலிருந்து மீள்விக்கப்பட்டது