பக்கம்:குறள் நானூறு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறையாத விளே பொருள்களும், தகுதி வாய்ந்த சான்ருேரும், தாழ்ந்த குணம் இல்லாத பெருஞ் செல்வ ரும் பொருந்தியுள்ள நிலமே நாடு எனப்படும். 名4星

மற்றைய எளிய நாட்டின் மக்களைத் தாங்கும் பொறுப்பு தன்மேல் வரும்போது தாங்கிக் காத்து, ஆட்சித் தலைவனுக்குரிய இறைக்கடளுகிய வரியையும் நிறைவாகத் தரும் வாய்ப்புள்ளது சிறந்த நாடாகும்.

242

வருத்துகின்ற மிகுதியான பசியும், தணியாத நோயும் அழிக்கும் பகையும் சேராமல் இயங்குவதே நலம் மிக்க நாடாகும். 243

நாட்டில் பல மாறுபாடுகளேயுடைய குழுக்கள் இருத்தல் கூடாது. கூடியிருந்தே கெடுக்கும் உட்பகை இருக்கக் கூடாது. ஆட்சித் தலைவனைக் கலக்குகின்ற கொலைகாரக் குறும்பர்கள் உலவக்கூடாது. இவை யற்றது தீங்கற்ற நாடாகும். 244

சிறப்பித்துக் கூறப்படும் நாடு பிற நாட்டிடம் எப் பொருளையும் நாடிச் செல்லாத வளத்தையுடைய தாகும். மற்ற நாட்டினே உதவிக்கு நாடி உதவிபெற்று மக்களுக்கு வளத்தைத் தருகின்ற நாடு சிறப்பித்துச் சொல்லத் தக்க நாடு ஆகாது. 3全5

100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/112&oldid=555609" இலிருந்து மீள்விக்கப்பட்டது