பக்கம்:குறள் நானூறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு நாட்டிற்கு அரண் என்பது காவலுக்கு சிறு முயற்சியோடு பெரும் இடத்தை உடையதாக அமைய வேண்டும். அத்தகைய அரண் நாட்டைத் தாக்கும் பெரும் பகையின் ஊக்கத்தையும் அழிக்கும். 246

செல்வம் என்பது எக்காலத்தும் அணையா விளக்கு. அவ்விளக்கம் தன்னே உடையவர் நினைக்கும் இடமெல் லாம் சென்று வறுமையாகிய இருளை அறவே போக்கும். - 247

இறைக்கட னம் வரியாகக் கிடைக்கும் பொருளும், சுங்கப் பொருளும், பகைவரைத் தாக்கி வென்று பெறும் பொருளும் ஆட்சித் தலைவனது ஆட்சிக்குரிய பொருள்களாம். 248

அருள் அன்பு என்னும் அன்னே பெற்றெடுத்த குழந்தை. அக்குழந்தையை வளர்க்கும் செவிலித் தாய் செலவப் பொருளாகும். எனவே, அருள் பொருளால் வளரும். 249

குன்றின்மேல் ஏறி நின்று கண்டால் யானைப் போரை அச்சமின்றிக் கண்டு மகிழலாம். அது போன்றே, தான் ஈட்டிய கைப்பொருள் ஒன்று தன்னி டம் அமையப் பெற்றவன் செயல்களைக் கலங்காமல் செய்து மகிழ்வான். 25s)

! {} 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/114&oldid=555611" இலிருந்து மீள்விக்கப்பட்டது