பக்கம்:குறள் நானூறு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவனது குணம், குடி குற்றம், இனம் முதலிய வற்றைப் பல முனேகளிலும் ஆய்ந்து ஆய்ந்து நட்புக் கொள்ளுதல் வேண்டும். அல்லாதவனுடைய நட்பு முடிவாகத் தான் இறக்குமளவு துயரத்தைத் தரும். 261

குற்றம் செய்தவிடத்து நண்பர் தன்னைக் கண்ணிர் விடும் அளவு வருந்தவைத்து அறிவுரை சொல்பவராக வேண்டும். அன்றியும், உள்ளத்தில் உறுத்தும்படி சொல்வித் திருத்த வேண்டும். உலக வழக்குகளை அறிப் வராகவும் அமைய வேண்டும். அத்தகைய வல்லமை உள்ளவரையே நண்பராகக் கொள்ளவேண்டும். 262

மனத்தில் பொருமை முதலிய குற்றம் அற்றவரது நட்பைத் தேடியும் தழுவிக்கொள்ள வேண்டும். தனக்கு ஒத்த தன்மை இல்லாதவரது தொடர்பை ஏதேனும் ஒன்றை ஈடாகக் கொடுத்தேனும் நீக்கிவிட வேண்டும். 263

பழைமை என்று சிறப்பித்துக் கூறப்படுவது யாது? யாதெனில் நெடுநாள் நட்பால் கொள்ளும் உரிமை யைக் கீழாகக் கருதாமல் மதித்துப் போற்றும் நட்பே யாகும். 264

நட்புக் கொண்டவர் தம் நண்பர் துன்பப்படத்தக்க செயலைச் செய்யமாட்டார். செய்தால், அறியாது தவறிச் செய்தார் என்று உணர்க! அன்றிப் பழைமை யான நட்பு என்னும் உரிமையால் செய்தார் என்று உணர்கi &徐颅

108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/120&oldid=555617" இலிருந்து மீள்விக்கப்பட்டது