பக்கம்:குறள் நானூறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்பவர் பெரியவர். செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய முடியாதவர் சிறியவர். - 6

வாய்ச்சுவை, கண்ணுெளி, உடல் உணர்ச்சி, செவி ஒவி. மூக்கு மணம் என்னும் ஐந்தின் பாகுபாட்டைத் தெளிவாக உணர்ந்தவன் அவற்றைக் கட்டுப் படுத்துவான். அவன் உலகத்தையே கட்டுப் படுத்து பவன் ஆவான். அதனுல் உலகம் அவனிடம் அடங்கும் எனலாம். : 7.

நலம் நிறைந்த மொழிகளைக் கூறும் மாந்தர், பெருமை மிக்கவர். அவர் கூறும் மொழிகளே மறை. மொழிகள். அவர் கூறுபவை நிறைவேறுவதால் அம்மொழி அவர் பெருமையைக் காட்டும். 8:

குணம் என்பது ஒரு மலை. அதன் முகட்டில் ஏறி நிற்பவர் சான்ருேர். அவர் சினங் கொள்ளார். கொண்டால், அதனைப் பிறரால் ஓர் இமை நேரமும்

தாங்க இயலாது. go

- எல்லா உயிர்களுக்கும் அருள் செய்து வாழ்பவர்

அறவோர். அதனல், அவரே அந்தணர் எனத்தக்கவர். I {}* ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/16&oldid=555513" இலிருந்து மீள்விக்கப்பட்டது