பக்கம்:குறள் நானூறு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பு முகையாகிய மொக்குளுக்குள் மணம் தேங்கியிருக்கும். அதுபோன்று, இந்தப் பேதைப்பருவம் பெண்ணின் புன்முறுவலாம் மொக்குளுக்குள் உள்ளது ஒன்று உண்டு. அது மணக்கும் காதல் ஆகும். 381

இவள் தன் காதல் ஏக்கத்தைத் தன் கண்க ளாலேயே குறிப்பாகச் சொல்லுகின்ருள். அக்குறிப்பி லேயே பிரியாதீர்" என்று என்னை இரக்கினருள். இதுபோன்று குறிப்பில் அறிவுறுத்தலால் இவனது இயல்பான பெண்தன்மை மேலும் பெண்தன்மையைப் பெற்றதாகின்றது. 882

காமம் கள் போன்று மயக்கம் தருவது. ஆளுலும் கள்ளைக் குடித்தால்தான் களிப்படையலாம். காமம் நினைத்த நினைப்பிலேயே களிப்படையச் செய்யும். கண்ட காட்சியிலேயே மகிழ்வடையச் செய்யும். இவை இரண் டும் கள்ளுக்கு இல்லை. 383

கண்ணுக்கு மை தீட்டும் போது தீட்டும் மைக் கோலைக் கண் காண்பதில்லை, அதுபோன்று, காதலரைக் காணும்முன் எண்ணிப்பார்த்த அவரது குறைகள் அவ ரைக் கண்டதும் நினைவில் காணுது மறைந்து விடுகின்றன, 384

காமம் மலரைவிட மென்மையானது. அதன் மென்மையை அறிந்து பக்குவமாகப் பயன்கொள்பவர் உலகில் சிலரே. அச்சிலருள் யானும் ஒருவன். პ8 $

153

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/170&oldid=555667" இலிருந்து மீள்விக்கப்பட்டது