பக்கம்:குறள் நானூறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவன் தன் உள்ளத்தில் பொருமை கொள்ளாத தன்மையைப் பெறுதல் வேண்டும். அத்தன்மையைத் தன் ஒழுக்க நெறியாகக் கொள்வாளுக! 7.1

மற்றவரது வளர்ச்சி கண்டு பொருமை கொள்ளு தல் ஒரு தவருண உணர்வு. அவ்வுணர்வால் துன்பம் உண்டாகும், நல்லோர் அதனை அறிந்து பொருமை கொள்ளார்; தீமைகளைச் செய்யார். 72

பொருமை என்பது ஒர் ஒப்பில்லாத பாவி. அது தன்னைக் கொண்டவரது செல்வத்தையும் அழகையும் கெடுக்கும்; தீய இடத்தில் கொண்டு செலுத்தும். 73 மனத்தில் பொருமைக்கு இடமளித்தவன் வாழ் வில் மேம்பாட்டை அடையான். பொருமைக்கு இடமளிக்காதவன் வாழ்வில் கேட்டை அடையான். இவற்றிற்கு முரண்பாடாக பொருமையன் மேம் பாடும். தூயவன் கேடும் பெற்ருல் அனுபவிக்கத் தக்கன. அவற்றின் காரணம் சான்ருேரால் ஆழ்ந்து ராயத்தக்கன. 74

பொருமைகொண்டு வாழ்வில் மேம்பாட்டை அடைந்தவரும்இலர். பொருமையை விட்டு வாழ் வில் தாழ்ந்தவரும் இலர், * 75

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/42&oldid=555539" இலிருந்து மீள்விக்கப்பட்டது