பக்கம்:குறள் நானூறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. புகழ்

உயிருக்கு ஊதியம் புகழ்

ஈதல் இசைபட வாழ்தல், அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231–96

வித்தகரது கேடும் சாக்காடும் நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. 235–97

புகழொடு தோன்றுக

தோன்றின் பிகழொடு தோன்றுக அஃதிலார் - தோன்றலின் தோன்ருமை நன்று. 236–98

வளங்குன்றும் வளமான கிலம் வசையிலா வண்பயன் குன்றும், இசையிலர் யாக்கை பொறுத்த நிலம். - 239–99

உண்மை வாழ்வினர் -

வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசையொழிய வாழ்வாரே வாழா தவர். 340-100

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/53&oldid=555550" இலிருந்து மீள்விக்கப்பட்டது