பக்கம்:குறள் நானூறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்பம் வருவதற்கு முன்னர் அதற்குக் காgr மாகும் குற்றத்தை நீக்கிப் பாதுகாப்பு செய்துகொள்ள வேண்டும். செய்து கொள்ளாதவன் வாழ்க்கை கெடும்; தீயின் முன்னர் வைக்கோல் போர் பாதுகாப்பற்று எரிந்து கெடுவதுபோன்று விரைந்து கெடும். 151

எக்காலத்தும் தன் இனத் தானே புகழ்ந்து வெற்று மதிப்புக் கொள்ளாது விடுக! அதுபோன்றே நன்கை தராத குற்றமுள்ள செயல்களே விரும்பாமல் கடிந்து நீக்கிவிடுக ! 152

தான் விரும்பிய விருப்பம் ஈடேறும்வரை பிறர் அறி யாதபடி அமைதியாக ஆரவாரமின்றிக் கொண்டு செலுத்தினுல் குற்றமற்றதாக முடியும், அப்படிச் செலுத் தின் பகைவரது சூழ்ச்சி நிறைந்த திட்டங்களாலும் இடையூறு செய்ய இயலாது. 153

அறத்தை அறிந்தவராய், ஆண்டாலும் ஆறிவாலும் மூத்தவரே பெரியார். அவரைத் துணையாகக் கொள்ளும் திறனே அறிந்து ஆராய்ந்து கொள்ளவேண்டும். 154

நல்ல நட்பு:கக்கிகாண்ட பெரியாரது துணையைக் கை விடக்கூடாது. கைவிடுதல் பலரது பகையைக் கொள்ளுவதைவிடப் பத்து மடங்கு தீமையைத் திரும், 155

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/76&oldid=555573" இலிருந்து மீள்விக்கப்பட்டது