பக்கம்:குறள் நானூறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனச்சோர்வாகிய மறதி பொச்சாப்பு எனப்படும். அப்பொச்சாப்பு கிடைத்த புகழையும் கெடுத்துவிடும். நாள்தோறும் வரும் வறுமை நல்ல அறிவையும் கெடுப்பதுபோன்று கெடுத்துவிடும். I76

பின்னர் நேரும் இடையூறுகளை முன்னரே நினைந்து பார்த்துக் கவனமாய், மறதியால் தவறுதல் கூடாது. தவறுவதால், இடையூறு வந்த பின்னர் தன் தவற்றை எண்ணித் தனக்குத்தானே இரங்கவேண்டி நேரும். 177

தாம் தமக்கு உண்டான மகிழ்ச்சியால் பெருமிதம் கொள்ளும்போது ஒன்றை' மறந்துவிடக்கூடாது. அதுபோது, மறதி என்னும் இகழ்தற்குரிய தன்மையால் கெட்டுப்போன்வரை மறவாமல் நினைக்கவேண்டும். 178

ஆட்சியில் செங்கோல் முறை என்பது நிகழ்ந்தவை களே ஆராய்தல்; ஆராய்ந்து எவரிடமும் கண்ணுேட்டம் காட்டாமை காட்டாது நேர்மையை விரும்பல்; விரும்பித் தீர்ப்பைத் தேர்ந்தறிதல். இவற்றின் தொகுப்பே செங்கோல் முறையாம். 17 9

ஆட்சித் தலைவன் குடிமக்களைப் பகை முதலிய வற்ருல் துன்பம் தே ராமல் காக்கவேண்டும்: காத்து வாழ்வில் வளந்தந்து பேணவேண்டும். இவற்றுடன் குற்றங்களைத் தக்க ஒறுத்தல் மூலம் போக்குதல் வேண்டும். ஒறுப்பது பழியாகாது; ஆட்சித்தலைவன் தொழிலாகும். 180

7垒

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/86&oldid=555583" இலிருந்து மீள்விக்கப்பட்டது