பக்கம்:குறள் நானூறு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகத்தை முறிக்காமல் கண் நோக்கை ஒடவிடல் கண்ணுேட்டம் (தாட்சணியம். இவ்வாறு சிறப்பித் துக் கூறப்படுவது மக்களுக்குச் சிறந்த அழகு ஆகும். இது மக்களிடம் உள்ள காரணத்தால்தான் இவ்வுலகு இயக்கம் கெடாமல் நிலைத்து இயங்குகின்றது. f 86

உலக நடைமுறை ஒருவருக்கொருவர் கொள்ளும் கண்ணுேட்டத்தில்தான் உள்ளது. எனவே, அக்கண் ணுேட்டம் இல்லாதவர் உலகியலுக்குப் பயன்படாதவர்.

அவர் இந்நிலத்திற்கு உண்மையிற் சுமையே ஆவார்.

187

கண்ணுல் அளவளாவும் பார்வையோடு பொருந் திக் கண்ணுேட்டம் செலுத்தவேண்டும். அவ்வாறு கண்ளுேடாதவர் மண்ணுேடு பொருந்திய பட்ட மரம் மட்கிப் போவது போன்று வாழ்வில் வீணுவார். f 88

கண்ணுேடுவதால் எடுத்த செயல் சிதையக் கூடாது. இது ஒரு வல்லமை. இவ்வல்லமை உடைய வருக்கு இவ்வுலகம் உரிமையாகும். 189

கண்ளுேட்டம் மிக நயம் வாய்ந்த நாகரிகம். அதனை விரும்புபவர் தம்பால் அன்புடையவர் நஞ்சை ஊற்றி வழங்குவதைக் கண்டும் முகத்தை முறிக்காமல் அதனை உண்டு மகிழ்வர். இது மிக மிக மேம்பட்ட பெருந்தன்மையாகும். - 1 90

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/90&oldid=555587" இலிருந்து மீள்விக்கப்பட்டது