பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

குழந்தை எப்படிப் பிறக்கிறது?


கழுவிக்கொள். அப்படி அநேகர் செய்வதில்லை. அது பெரிய தவறு. இரவில் பல்லைத் துலக்கிக்கொண்டு தூங்குவது மிகவும் நல்லது.

4. அம்மா! நீ காலையில் தேகப்பயிற்சி செய்யவும் மாலையில் ஆடி ஓடி விளையாடவும் வேண்டும். நீ தினந் தோறும் காலையில் செய்கிறாயே அந்த ஆஸனங்களும் நல்லவைகளே. அதன் பிறகு சிறிது நேரம் வெயிலில், தலையில் படாதபடி நெஞ்சையும் முதுகையும் காட்டிக் கொண்டிரு. அது உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.

5. காலையில் குளிர்ந்த ஜலத்தில் ஸ்நானம் செய்வது ஆரோக்கியமானது. அடிக்கடி வெந்நீரில் குளித்தால் தாது வளர்ச்சிக்குக்கேடு செய்யும் உடம்பு முழுவதையும் நன்றாகத் தேய்த்துக் குளி. மூத்திரம் பெய்யும்பொழுதெல்லாம் அந்த உறுப்புக்களைக் கழுவுதல் நல்ல பழக்கம். குளிப்பதற்குச் சோப்புக்களைவிட நீ தேய்க்கிறாயே அந்த பாசிப் பயற்றம்பொடியே மிக நல்லது. அதில் அம்மா கொட்டான், பூலாங்கிழங்கு, தாமரை மொட்டு, வெட்டி வேர் என்று சில வாசனைச் சாமான்களையும் பொடி செய்து கலந்திருப்பதால் அதைத் தேய்த்துக் குளித்தால் உன்னுடைய உடம்பு நல்ல வாசனையாயிருக்கிறதல்லவா? சில பெண்கள் ஸ்நானம் செய்து உடம்பு துவர்த்திய பின் முகத்தில் “பவுடர்” பூசுகிறார்களே, அதைவிடக் குளிக்கும்பொழுது மஞ்சள் பூசுவதே சிலாக்கியமாகும்.

6. எவ்வளவுக் கெவ்வளவு காற்றும் வெளிச்சமும் உடம்பில் படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. அதனால் சிறுவர்களும் சிறுமிகளும் குளிர் இல்லாத சமயங்களில் நெஞ்சில் சட்டை போடாமலிருப்பதுதான் நல்லது. சட்டை போட்டாலும் அது இறுக்கமாக இருக்கக்கூடாது. அதோடு நீ உன்னுடைய உடைகளைத் தினந்தோறும் நன்றாகத் துவைத்துச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.