பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

குழந்தை எப்படிப் பிறக்கிறது?


அப்பா:--ஆம் தாகம் வந்த சமயம் தண்ணிர் குடிப்பது உண்மைதான். ஆனாலும் பார், அம்மா! நாய் வீதி வழியே போகிறது. அதற்குத் தாகம் வந்து விடுகிறது, உடனே சாக்கடை ஜலத்தைக் குடிக்க ஆரம்பித்து விடுகிறது.பார்த்திருக்கிரும்பா?

பாப்பா:--ஆம், அப்பா, பார்த்திருக்கிறேன். காக்கா, கூட அப்படிக் குடிக்கிறது அப்பா! சில சமயம் அந்த அழுக்கு நீரிலே குளிக்கக்கூடச் செய்கிறது.

அப்பா:--ஆனால் அந்த மாதிரி நீ தாகம் எடுத்தால் சாக்கடை ஜலத்தைக் குடிப்பாயா?

பாப்பா:--சாக்கடை ஜலத்தையா! அதென்ன அப்படிக் கேட்கிறாய். அதை யார் குடிப்பார்கள்? எவ்வளவு தாகமாயிருந்தாலும் வீட்டில் போய் நல்ல ஜலத்தைத் தானே குடிப்போம்.

அப்பா:--அம்மா, ஏன் நீ சாக்கடை ஜலத்தைக் குடிக்கமாட்டாய்?

பாப்பா:--அப்பா! அது அழுக்கு ஜலம் அல்லவா, அதைக் குடிக்கலாமா?

அப்பா:--பார்த்தாயா இதுதான் வித்தியாசம் நமக்கும் பிராணிகளுக்கும். அவைகள் நல்லதா, கெட்டதா என்று அறியாமலே காரியங்களைச் செய்யும். ஆனால் நாமோ அப்படிச் செய்யமாட்டோம். எதையும் யோசித்தே செய்வோம்.

பாப்பா:-ஆம் அப்பா! நம்முடைய பசுவுக்கு வைக்கோல் வைத்தால் அது வாயால் அதை இழுத்து எடுத்துத் தின்னுகிறது.ஆனால் அதில் ஏதாவது கீழே விழுந்து விட்டால் மூத்திரத்தில் விழுந்தால் கூட எடுத்துத் தின்னுகிறது. அப்படி நாம் ஏதாவது மூத்திரத்தில் விழுந்து விட்டால் அதை எடுத்துச் சாப்பிடுவோமோ, சாப்பிடமாட்டோம் அல்லவா அப்பா?