பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

அனுப்புவதற்காக அதன்மேல் ஏறிக் கொத்துமோ அப்பா! அந்தப் பெட்டைக் கோழி நல்லதா என்று கவனிக்குமா அப்பா!

அப்பா :--ஆம், அம்மா! சேவற்கோழி பெட்டைக் கோழிமேல் ஏறிக் கொத்தத்தான் ஆரம்பித்துவிடும். ஆனால் அந்தப் பெட்டைக் கோழி ஆரோக்கியமாயிருக்கிறதா, பருமனாக இருக்கிறதா என்றெல்லாம் கவனிக்காது அம்மா!

பாப்பா :--ஆம், அப்பா! அதெல்லாம் கவனிப்பதற்கு அதற்கு நம்மைப்போல் அறிவேது?

அப்பா :--பார்த்தாயா, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன், நீ கெட்டிக்காரி, சொல்லிவிட்டாய்.

பாப்பா :--அப்பா! பெட்டைக்கோழி நல்லதாக இராவிட்டால் அது இடும் முட்டைகள் சிறிதாகத் தானே இருக்கும்?

அப்பா :--ஆமாம், அதில் என்ன சந்தேகம்? முட்டைகள் மட்டுமா சிறியதாக இருக்கும்? குஞ்சுகளும் சிறிதாகத்தான் இருக்கும்.

பாப்பா:--அந்தக் குஞ்சுகள் பார்க்க அழகாயிராது, அப்பா!

அப்பா :--ஆம், அம்மா! அவைகள் அழகாயுமிரா, சீக்கிரத்தில் செத்துக்கூடப் போகும்.

பாப்பா :--ஆம், அப்பா! நல்ல பெட்டைக் கோழியாயிருந்தால் பருமனை முட்டையிடும். குஞ்சுகள் அழகாயும் பலமாயுமிருக்கும்.

அப்பா:--அம்மா! இன்னென்று கேட்கிறேன், சொல்லு பார்ப்போம். பெட்டைக்கோழி நல்லதாயிருந்தால்தான் குஞ்சுகளும் நல்லதாக இருக்கும் என்று சொன்னாயே! அப்படியே பெட்டைக்கோழி நல்லதாக இருப்பதாக