பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

103


இவ்வாறு பந்தை எடுத்து, அடித்தாடும் ஆட்டம் சிறிது நேரம் தொடரும். பிறகு மீண்டும் முன் போல் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

4.5 ஆனையும் ஆமையும் (Crows and Cranes)

(காக்கையும் கொக்கும் என்று கூறினால், ஆட்டம் சரிவர வராது என்பதால், ஆனையும் ஆமையும் என்று இதற்குப் பெயர் தந்திருக்கிறேன்.)

வந்திருக்கும் குழந்தைகளை சம எண்ணிக்கையுள்ள, இரண்டு குழுவாகப் பிரித்து நிற்க வேண்டும்.

6 அடி இடைவெளி தூரம் இருப்பது போல இரண்டு இணையான (Parallel) கோடுகளைப் போட்டு, இரண்டு குழுவினரையும் ஒருவரை ஒருவர் பார்ப்பது போல,கோட்டின் மீது நிற்க வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவுக்கும் பின்னால் 40 அடி தூரத்தில், ஒரு கோடு போட்டு, அதனை இறுதி எல்லை என்று குறித்திருக்க வேண்டும்.

ஒரு குழுவிற்கு ஆனை என்றும், இன்னொரு குழுவிற்கு ஆமை என்றும் ஆசிரியர் பெயர் கொடுத்திருக்க, அவர்கள் ஆடுவதற்குத் தயாராக நிற்க வேண்டும்.

ஆசிரியர் யார் பெயரைக் கூறுகிறாரோ; அந்தக் குழு தங்கள் இறுதி எல்லையை நோக்கி ஓட, மற்ற குழு அவர்களை விரட்டித் தொட முயற்சித்து, எல்லைக்