பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

115


சைகை கிடைத்ததும், வலது கைப் பிடியை இறுக்கி, எதிராளியைத் தள்ளி, முன் பாதத்தினால் நிற்பதை, தடுமாறி காலை ஊன்றச் செய்து விட வேண்டும். இது தான் ஆட்டத்தின் நோக்கம்.

பாதங்களினால் நிற்க முடியாமல், தடுமாறி காலை தரையில் ஊன்றி விடுபவர் தோற்றவராகிறார். (6.1. படம் பார்க்கவும்.)

7. உடல் நலம் (Health)

சுற்றுப்புற சுகாதாரம்

7.1. குடிநீர்ப் பழக்கம்

தன்னுடல் சுகாதாரப் பழக்க வழக்கங்களில், தகுந்த பயிற்சிகளையும் பழக்க வழக்கங்களையும் மேற்கொண்டால் தான், சுற்றுப்புற சுகாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். பேரார்வத்துடன் வளர்க்கவும் முடியும்.

7.1.1. குடிநீர் பற்றி தெளிந்த அறிவு வேண்டும். பாதுகாக்கப்பட்ட, சுத்தமான நீரையே குடிக்கும் பழக்கம் வேண்டும். அப்படி வைத்திருக்கும் குடிநீரைப் பயன்படுத்துகிற போது, சுத்தமாகவும் பத்திரமாகவும், வீணாக்கமல் பாதுகாத்துக் கையாளுகின்ற பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.