பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

117


சமயத்தில் சாப்பிடுகிற பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சாப்பிடுகிற போது அவசரம் கூடாது. எந்தக் கவலையையும் துயரத்தையும் மனதில் ஏற்றி வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.

மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் இருப்பது போல், ஆனந்தத்துடன் சாப்பிட வேண்டும். அதற்காக, அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது. அதிகமாக சாப்பிடுவது, உடலை வளர்க்காமல், கெடுத்து விடும்.

7.2.2. காலம், பருவம் இவற்றிற் கேற்பவே, உணவுப் பழக்கம் மாறும். அந்தந்த பருவத் தின் தட்ப வெப்பநிலைக்கேற்ப, உணவை உட்கொள்ளும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

7.2.3. உள்ளுரிலே கிடைக்கின்ற உணவுப் பொருட்கள் எல்லாம் உடலுக்கு நல்லது. அவற்றை உதாசினப்படுத்துவது, உதறித் தள்ளுவது நல்ல தல்ல. ஆகவே, நல்ல தரமான உள்ளுள் உணவுப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளுவது அறிவுடமையாகும்.

7.2.4. பச்சைக்காய் கறிகள், புதிய பழங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை நன்றாக நீரில் கழுவிய பிறகே, சாப்பிட வேண்டும்.

7.2.5. உண்ணும் பண்டங்களை வீணாக்கவே கூடாது. தேவையானதை தெரிந்தெடுத்து உண்ணும்