பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா



10. உடற்பயிற்சிகள் - விளக்கமும் இயக்கமும்

உடற்பயிற்சி என்றால் உடல் உறுப்புக்களைப் பதமாக்கிப் பாதுகாப்பதாகும். உடலுறுப்புக்களை இதமாக வளர்த்து வலிமை பெறச் செய்வதாகும்.

உடற்பயிற்சி என்பது உடலுக்கு நோய்வராமல் காத்து, உடலுக்குள்ளே இருக்கும் மனதை சக்தியும் சாமர்த்தியமும், நிம்மதியும் அமைதியும் நிறைய வளர்த்துக் கொள்ளும் விதத்தில் உருவாக்க உதவி, வாழ்க்கையை நலமாக வாழ்ந்திட உதவுவதாகும்.

நம்மில் சிலர் வேலை செய்தால் போதும் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமேயில்லை என்று கூறுகிறாள்கள்.

உடல் இயக்கம் வேறு, வேலை என்பது வேறு. உடற்பயிற்சி என்பது வேறு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மையறியாமல் உடல் உறுப்புக்களை, கை கால்கள் போன்றவற்றை அசைப்பது, ஆட்டுவது எல்லாம்