பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அவற்றுடன், இன்னும் கொஞ்சம் விளக்கமாக, உடல் நலப் பழக்கங்களைக் கற்றுத்தருவோம்.

பல துலக்கும் போது, பற்பசை, பிரஷ் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். அல்லது மென்மையான பற்பொடியை; மென்மையான குச்சிகளான ஆலம் விழுது, கருவேலங்குச்சி, போன்றவற்றை பயன்படுத்துமாறு அறிவுறுத்தலாம்.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழமொழி.

முடியை சீவிக் கொள்கிற சீப்பினை, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பற்களில் அழுக்குத் தேங்கி விடுமாறு வைக்கக்கூடாது.

தலைமுடி சிக்கல் இல்லாமல் இருக்க, தினம் குளிக்க வேண்டும். சரியாக எண்ணெய் தடவ வேண்டும்.

குளிப்பது மிகவும் அவசியம். உடலில் வருகிற வியர்வையில், தூசிகள் படிந்து அழுக்காகி விடுவதைப் போக்கவே, தினம் குளிக்க வேண்டும். தினம் குளிக்காவிட்டால், தேகம் நாறத் தொடங்கி விடும்.

குளித்த பிறகு உடம்பைத் துடைக்கப் பயன்படுகிற துண்டானது சுத்தமாக இருக்க வேண்டும். துவைத்த சுத்தமான ஆடைகளையே, குளித்த பிறகு அணிந்து கொள்ள வேண்டும்.