பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

91


சிறு கம்புப் பயிற்சிகள் (Wand drills)

டம்பெல்ஸ் பயிற்சிகள் (Dum bells)

பிற்பகுதியில் தனித் தனியாகத் தரப்பட்டிருக்கின்றன. வேண்டும் பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

3. முன்னோடி விளையாட்டுக்கள் (Lead up games)

முதன்மையான விளையாட்டுக்களில், முக்கிய திறன் நுணுக்கங்கள் என்று பல பிரிவுகள் இருக்கின்றன. அந்தத் திறன்களை நன்றாகக் கற்றுக் கொள்ளவும், அவற்றில் தேர்ச்சி பெறவும், நன்கு விளையாடவும், முன்னோடி விளையாட்டுக்கள் உதவுகின்றன.

இந்த வயதுக் குழந்தைகளுக்கு, இங்கே மூன்று விளையாட்டுக்களைக் கற்றுத் தருகிறோம்.

1. கோகோ 2. கால்பந்தாட்டம், 3. கிரிக்கெட்

அவற்றைக் கற்றுத் தரும் ஓரிரண்டு முன்னோடி விளையாட்டுக்களைப் பார்ப்போம்.

3.1 கோ கோ ஆட்டம்

கோ கோ ஆட்டத்தில் முக்கியத்திறன்கள் விரட்டுதல், கோ கொடுத்தல்: தப்பி ஓடுதல்; ஏமாற்றி சமாளித்து ஓடுதல் முதலியன.

அதற்கான முன்னோடி ஆட்டம்

வட்டக் கோ கோ (circle kho kho)