பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

95


காலால் உருட்டல்; தலையாலிடித்தல், இலக்கைக் காத்தல் போன்ற திறன்கள் உண்டு.

அவற்றை வளர்த்து விடுகின்ற இரண்டு முன்னோடி ஆட்டங்களைப் பார்ப்போம்.

வட்ட இலக்குக் கட்டைகளை வீழ்த்தல் (Pin Foot ball)

கால் பந்தாட்ட ஆடுகளத்தின் நீளம் 100 அடி, அகலம் 50 அடி ஒவ்வொரு அகலப் பக்கத்திலும் 5 அடி விட்டமுள்ள ஒரு வட்டம். அந்த வட்டத்திற்குள்ளே 2 கரளா கட்டைகளை (Clubs) நிறுத்த வேண்டும்.

ஒரு குழுவிற்கு 20 ஆட்டக்காரர்களாக, இரண்டு குழுக்களாகப் பிரித்து விட வேண்டும்.

ஒரு பருவத்திற்கு 10 நிமிடமாக, 2 பருவங்கள் (Half) ஆடச் செய்ய வேண்டும்.

பந்தைக் காலால் தான் உதைக்க வேண்டும். கையால் தொடக்கூடாது.

இரண்டு குழுவினரும், தங்கள் எதிர்க்குழுவினர் காத்து விளையாடுகின்ற வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கரளா கட்டைகளை, பந்தை உதைத்து, அதன் மூலம் வீழ்த்த வேண்டும்.