பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

முனைய அவளுக்கு மனம் தளர்ந்து போச்சோ எது வென்று அறியேன், ஆனால், உர்ஸ் பற்றி ஒன்று தெரிந்து கொண்டேன். -

உர்ஸ் புத்திசாலி. ஆனால், அவளுக்கு உடம்பு வணங்க வில்லை. அவளுடைய கவர்ச்சியே அதுதானோ என்னவோ? படித்துவிட்டுச் சும்மாயிருக்கும் மலையாளி உண்டோ? மலையாளிகளில் சோம்பேறி உண்டோ? ஆனால் உர்ஸ் சோம்பேறி. எதிலும் அவளுக்கு ஊக்கம் கிடையாது. வேலைக்குப் போய், பத்திலிருந்து ஐந்து வரை மேசையில் அமர்ந்து பேனா உழைப்புக்கு உடலும் மனமும் இடம் கொடுக்கவில்லை. உடம்புக்கென்னகேடு, சரியான, கடைத் தெடுத்த உருட்டுக்கட்டை எல்லாம் மனசுதான்.

வீட்டுக்கு ஒரே பெண், ஒரே குழந்தை. பெற்றோர் களுக்கும் அவளை உழைப்புக்குப் பழக்க வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. தேவை சிறைய இருக்கிறது. கிடைத்தால் ஆடு அன்றைக்கு மாடு மத்தி யானம். கிடைக்காவிட்டால் கிடைக்கும் வரை எங்காணும் உருண்டு உறங்கிக்கிட, அதுவே தத்துவம் என்றால் பிறகு அவர்களை என்ன செய்ய முடியும்?

மிஸ்டர் ஜியார்ஜ் தண்ணி போடுகிறார். மிஸ்ஸ் ஜியார்ஜ் தண்ணி போடறாங்கோ. மிஸ் உர்ஸ்-லா ஜியார்ஜ் என்னிக்குப் போடப் போகி றாளோ அல்ல, ஏற்கெனவே தொடங்கி ஆச்சோ தெரி யாது. தெரிந்து எனக்கு என்ன ஆகனும்?

குடிசை உள் போகிறாள்.

குடிசை என்றால் இதுதான் அசல் குடிசை. நான்கு மண் சுவர்களின் தடுப்புள் ஒரு கணிசமான கூடம்; அவ்வ ளவுதான். போன வருடத்துக்கே தடதடவென்று சரியான ஊற்றல். ஒலைகளை அடியோடு மாற்றுவதென்று கை