பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

'ஒஹோ, கேலி வேறா? ஒரே வார்த்தையில் சொல் கிறேன். ஏற்கெனவே சொன்ன வார்த்தைதான். உங்க ளுக்கு வேர் கிடையாது. எனக்கு என் வேர்களைப் பிடுங்கிக் கொள்ள முடியவில்லை-’’

சிரித்தாள். அதுக்குத்தான் சொல்லச் சொன்னேன். உங்கள் பாஷை எங்கே புரியறது?"

"உனக்குப் புரிஞ்சுக்க இஷ்டமில்லையென்று சொல். இதென்ன, கூடைக்காரியுடன் கத்திரிக்காய் பேரமா? இதோ பார் மதுரம், வெட்கத்தை விட்டால் எப்படி வேணு மானாலும் வாழலாம்.'

என்ன பெரிய பேச்சாப் பேசறேள்? நாங்கள் என்ன அவிழ்த்துப் போட்டுண்டு ஆடறோமா?”

"சரிவிடு, நீ இப்பேர என்ன புதிதாய் வாழ்வைத் தேடறே'

“எனக்கு இங்கே பிடிக்கல்லே.’’

"ஆ, வங்தையா வழிக்கு? உனக்கு இப்போ பிடிக் கல்லே. எனக்கு அப்பவே பிடிக்கல்லே. அவ்வளவுதான் விஷயம்.”

சரி இப்போ என்ன சொல்றேள்?"

"என்னோடு வரேன் என்கிறாயா?”

அவள் தலையை ஆட்டுவது தெரிந்தது.

'மதுரம், இந்த உர்ஸ் பண்ணும் சமையல் வாயில் வைக்க வழங்காது.'

தலையில் அடித்துக் கொண்டாள்

"நான் வந்தப்புறம் கூட அவள் சமைத்து நாம சாப

பிடனுமா?"