பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

லடியில் சட்டிபானை; அப்படித்தான் வெட்ட வெளியில் தாமசம்; ஞான் பறைஞ்சாச்சு.'

அவளுடைய பறைகொட்டலில் பாதி நிஜம், என்று முழுசாகப் போகிறதோ?

புத்தகங்கள் இழுத்து விடுவதால், வயிற்றுச் செலவு இழுப்பாகி விடும். ஒரொரு சமயம் கலத்தில் சோற்றுக்குப் பதில் மரவள்ளிக்கிழங்கோ, சோளமாவோ, சொல்லிக் கொள்ளாமல் முனகினாள். ஷோக்காகச் சொல்லிடிப்பாள்.

-'காரணம் உங்கள் புது ஜே. கிருஷ்ணமூர்த்தி, பழம் ஜீன் கிறிஸ்டோபீயை, சாமியே விளிச்சுக் கேட்கட் டும்!"

'இரண்டுமே நான் வாங்கலியே கருணாகரன் கொடுத் ததல்லோ?’’ -

'அப்போ சாமி சாலையில் மிலிட்டெரி ஓட்டலில் வறுத்த மீன்- கோவளம் காச்-மொச்சைப் பருப்பு சுண் டலும் ஒரு கை பார்த்ததோ?” -

கண்ணை இறுகமூடி, காதைப் பொத்திக் கொள்ளும் என் அருவருப்பு கண்டு, அவள் சிரிப்பு உருட்டோடும். என் செவிமண்டலத்தில், ஏதேதோ இனித்த கோலங்கள் போட் டுக் கொள்ளும்.

ஒன்று போனால் ஒன்று உண்டு. ஒன்று வேணு மானால் ஒன்று இழக்கணும்.

ஒரே சமயத்தில் எல்லாமே இருத்திக் கொள்ள முடியாது...