பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

கரிப்பு இன்னும் அடங்காக் கண்ணுடன் இலையில் குடும் பத்துடன் உட்கார மணி மூன்றாகி விடும். (ஸாஸ்திரிகள் ‘மாமி, மாமாவுக்கு இனிமேல் ஒரு தம்ளர் காப்பி கொடுக்க லாம். நீங்களும் சாப்பிடுங்கோ.") எடுத்தவுடனே அந்தக் கறிவேப்பிலைத் துவையலில் சாதத்தைப் பிரட்டுகையில்அப்பப்பா! அந்த இதவான காட்டும் புளிப்பும் அவ்வளவு நன்றாயிருக்கும். அடுத்தாற் போல் கஷாயம் போல் ஆவி பறக்க அந்த மிளகு ரஸம்!-போச்சு, எல்லாமே போச்சு. ஒன்று வேனுமானால் ஒன்று இழந்தாக வேண்டும். எல் லாமே ஒரே சமயத்தில் நீ இருத்திக்கொள்ள முடியாது.

அம்மா! நிச்சயமாக எனக்கு நரகம்தான். எனக்கு நரகத்தில் கம்பிக்கை உண்டு. நான் என் இளைய தலை முறையைப் போல் பகுத்தறிவாளன் அல்ல. ஆனால், அத னின்று மீட்சி கூட உன் அகண்ட பாசத்தால்தான் கிடைக் கணும். ஆனால், வாய்ப்பந்தல் நிழல் தருமா? அம்மாவின் திதி இன்று மிஸ் உர்ஸ் ஜியார்ஜ் காய்ச்சின சாயாத்தண்ணி யுடன் ஆரம்பமாகிறது. இது மாதிரி சமயங்களில்தான் ஏக்கம் கவ்விக் கொள்கிறது.

உர்ஸ் உள்ளே போகிறாள்.

திருவையாறில் இன்று ஆராதனை. 8.00, 8.30க்கு ரேடியோவைத் திறந்தால் நாதஸ்வரம், பஞ்சரத்னக் கீர்த் தனைகள், வேத கோஷம். அம்மாவே ஒரு மஹான் தான்.

நான் இன்னும் ஆராதனையை நேரில் பார்த்ததில்லை

ஒரு தடவை- இருந்திருந்து காத்திருந்து போனேன். அப்போ அம்மா இருந்தாள்-விடிகாலை, திருச்சியிலிருந்து ஸ்பெஷல் காரில், நானும் நண்பர்களும் ஊரில் நுழையும் போதே ஒரு விதமாயிருந்தது களையேயில்லை. கூடிக் கூடிக் குமைவோரும், சலித்த கடையோருமாய்,. பந்தல்