பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

பாங்குக்குக் கேட்டாலும் சந்திரன் கோட்டை போல், அதுவும் அனுசரணையாத் தானிருக்கிறது.

சுழல் இழுத்துச் செல்கையில் கரையில் முளைத்திருக் கும் கோரைப் புல்லும் உயிருக்குப் பிடிதான். கரையேற ஒருவழிதான்.

கடிதத்தை அவளிடம் நீட்டுகிறேன். அப்படியே அவசரப் பார்வை பார்த்து, உதட்டைப் பிதுக்கித் தலையை ஆட்டி, கை விரிக்கிறாள். எனக்குப் புரிகிறது.

'என் மனைவி உடம்பு சரியில்லேன்னு எழுதி யிருக்கா.'

என் விழிகள் திடீரென வழிகின்றன. கான் எதிர் பார்க்கவில்லை. விரும்பவில்லை. சொட்டுக்கள் தோசை மேல் விழுகின்றன. நான் மறைக்க முற்படவில்லை. இனி மறைத்து என்ன? ஆனால் உர்ஸ் கண்டு கொள்ளாது கன காரியமாய் அடுப்பண்டை விரைகிறாள். போகிற போக்கில் மூச்சோடு மூச்சாய்:

'ஐயம் சாரி'

வார்த்தைகள் காற்றில் தொற்றிக் கொண்டு-காற்றை யும் பெருமூச்சாக்கின.

இலைகளின் ஒசைகள், பணிகளின் கானங்கள் சட்டென ஏதோ அச்சத்தில், அடங்கிப் போனாற்போல் தோன்றுகிறது; எனக்குப் பயம் அதிகரிக்கிறது. இவ்வளவு பெரிய அனுதாபம் நான் வேண்டவில்லை. உங்கள் ஒசை களில் ஒன்றாகி விடத்தான் என் விருப்பம்.

கேக்குப் பயமாயிருக்கு.

மரங்களின் பின்னணியில், அவைகளை ஓங்கிக் கொண்டு ஒரு கருமேகம் கட்டுகிறது. உயரமாய், அகலமாய்,