பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5認

தொட்டு மையிட்டுக் கொள்ளலாம் போன்ற அந்த மரப்பாச்சிப் பளபளப்புக்குப் புடவையின் தும்பைத் துல்லியம் கண்ணைப் பறித்தது. ரவிக்கையும் முண்டு மாகவே அவளைப் பார்த்துப் பார்த்துப் பழகிப்டோன கண் களுக்கு அவளை ஒழுங்காகப் புடவையில் காண்பதே ஒரு சிறு அதிர்ச்சி, சந்தோஷமான அதிர்ச்சி.

இத்தனைக்கும் சாதாரண மல்துணிதான்.

கடுவகிடு எடுத்து, அழுந்த வாரி, பின்னல் அப்படி ஒன்றும் நீளமில்லை. ஆனால் நல்ல அடர்த்தி. காலில் செருப்பு. கழுத்தில் மெல்லியதொரு சங்கிலி, உமா கவரிங்க் என்று கண்டு கொள்ள பூதக்கண்ணாடி வேண்டாம். எனக்கே தெரிகிறதே! கையில் ஒரு சின்ன பிரயாணப் பெட்டி, அதன் பிடியில் இரண்டு, கைகளையும் சேர்த்துக் கொண்டு அதை லேசாய் ஆட்டியபடி, முகத்தில் சந்தோஷ லஜ்ஜை குழும.

கொஞ்சம் கலராய் மட்டும் இருந்தால்... சென்னையில் ஆகாசத்தின் கூரையையே தாக்கி விடுவாள். இப்பவும் என்ன கேட்டுப் போச்சு?

கனைத்துக் கொண்டு கோபத்தை வரவழைத்துக் கொண்டேன். ஆனால் கோபம் சுபாவமாகவே அடி யெடுத்துக் கொடுத்த வேகத்தில் என்னைத் தாக்கிற்று, என்னால்தான் அவளை ஒண்னும் செய்ய முடியாது. அவள் கடப்பாரைக் கஷாயம் குடித்தவள்.

'அச்சனை சரியாக்கிட வழி உன்னுடையதுதானே? பணம் பறிக்கச் சொல்லிக் கொடுத்தது தோனோ?”

என் குரல் ஸ்தாயி ஏறிக்கொண்டே போய் உச்சத்தில் அசிங்கமாய், கெளரவமிழந்து உடைந்தது.