பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

முண்டமாகத் தொங்கிற்று. மருந்துக்கு ஒரு பற்பொடிப் பொட்டலம் கூட அதிலிருந்து விழவில்லை. காலி.

எங்களுக்கு வழிந்த அசடை முகத்துக்கு முகம்தான் தெரிந்து கொள்ள முடியும். சிரிப்பலை அடங்கியதும் எனக்குச் சீற்றம் மூண்டது. மதுரத்தின் கண்கள் என்னைக் குற்றஞ் சாட்டின. கேலி செய்தன. உடனே உள்ளுக்கு இழுத்துக்கொண்டன. உடனே ஒரு கவசப்பனி அவை மேல் படர்ந்தது. இவைக்கெல்லாம் அர்த்தம் என்ன வேணு மானாலும் பண்ணிக்கொள்ளலாம். எல்லோரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். அட அசடே யிலிருந்து 'அக்ரமம்! அக்ரமம்' வரை.

மதுரம்தான் சுருக்க சமாளித்துக் கொண்டுவிட்டாள். 'அதனால் என்ன? காட்ரெஜில் என்புடவை ரெண்டு மூணு அதிகமாத் தூங்கிண்டுதானேயிருக்கு இன்னிக்கு சாயந்திரம் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணினால் போறது. ஊர்வசிக்கு, அலங்காரம் பண்ணிப்பார்க்கணும்னு எனக்கும் ஆசையாயிருக்கு மறுபடியும் ஆவலோடு அந்தக் கட்டல். பாவம், மதுரம் சில சமயங்களில் பெரிய கடல்களைக் கூடக் கணப்பொழுதில் தாண்டிவிடும் சக்தி மதுரத்துக்கு உண்டு. என்னைப் பற்றி நான் அப்படி சொல்லிக் கொள்ள முடியாது. அவள் செளகரியத்திலேயே பிறந்து வளர்ந்து அதனாலேயே ஒரு பாரி மனப்பான்மையுடன், காலத்தை இதுகாறும் ஒட்டியும் விட்டாள். - என்னைப் பற்றி கான் அப்படி சொல்லிக் கொள்ள முடியாதே! இளமையில் வறுமையின் சிறுமணப்பான்மைப் பிசுக்கு இன்னும் விடமாட்டேன்கிறதே!

"சின்னப்பிள்ளை வாரார்' கட்டியம் கூவிவிட்டு உதவிமாமி சட்டென்று ஜன்னலிலிருந்து பின் வாங்கு கிறாள். அவள் முகத்தில் ஒரு கபட்டுச் சிரிப்பு,