பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

γθ

இப்போத்தான் தனக்கு இயல்பான சங்கோசம் பிசிர்களுடன் பழைய சாமா வெளிப்பட்டான்.

உர்ஸ் ஆச்சரியத்துக்குரிய ஆசாமி தான். இது போன்ற பரிசயங்கள் அவளுக்குள் நெடுநாளையப் பழக்கம் போல், முகத்தில் எவ்வித சலனமுமற்று ಟ್ತಿ அனாயாசம் அந்தப் புன்னகையில் என்ன தனிக் குளிர்ச்சி! அந்தக் கை கூப்பலில் என்ன ஒப்பற்ற செதுக்கல்! -ஆனால் முகத்தில் லேசாய், வெகு லேசாய், இப்போது ஒரு உன்னிப்பு காண்கிறேன். ஆம்.

மாடிப் படியில் திடுதிடு. கித்தாரை மீட்டிய வண்ணம் ப்ரபு வாசற்படியில் தோன்றுகிறான்.

தன் ப்ரவேசத்தால் எந்த இடத்தையும் மேடையாக்கி விடுவான் எந்தன் ப்ரபு,

என்னைக் கண்டதும்,

‘அப்பா!' ஒடோடி வந்து கட்டிக் கொள்கிறான். கித்தார் தோளில், லொடலொடாவென அதன் வாரில்

ஊஞ்சலாடுகிறது. சங்கோசமெல்லாம் அவனுக்குக் கிடையாது.

அவனும் நானும், பிள்ளையும் தகப்பனுமாவா பழகினோம்? தோழமையில் எப்படித் திளைத்திருந்தேன் ஒரு காலத்தில்!

'அப்பா என்ன ரொம்ப இளைச்சுப் போயிட்டேளே! கண்தான் வட்டமாயிருக்கு. கார்ட்டுன் பொம்மையாட் டம்! என்னம்ம்ா, உனக்கு அப்பா எப்படித் தெரியறா?'

r

'நான் சொல்லல்ல்ை. நீ சொல்லிட்டே."

"அப்படியெல்லாம் சொன்னால் உர்ஸ் சங்கடப் இவாள். எனக்குச் சோறு போடுகிறவள் அவள்தான்,'