பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?3

'இப்போ கான் கேட்டதனால் புதுசாவா மதுரம் அந்த சம்பந்தம் நீ பிடித்ததா? உனக்குச் சம்மதமா?”

'கானா, எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடை யாது. உங்கள் சம்மதத்தையும் என் சம்மதத்தையும் யார் கேட்கறா?'

'உன் பிள்ளைகளை நீ தலையில் வெச்சுண்டு கரகம் ஆடினதெல்லாம் போச்சா?”

"கரகம் தாக்க வேண்டியதுக்குத் தாக்க வேண்டியது தான்.'

'மதுரம் இது எங்கே போய் கிற்கும்?”

'அதான் கலியானந்தில் வந்து கிக்கறதே! இன்னும் எங்கே போய் கிற்கணும்?'

'அதில்லை மது! மஞ்சள் கயிறுக்கு மிச்சம் ஏதேனும் விட்டு.வெச்சிருக்குமா?’’

'யார் கண்டது? யார் கேட்பது? யாருக்கென்ன அக்கறை? பிள்ளைக்கு நீங்கள் பூணுால் போட்டேளா, அவன் கட்டப்போறத் தாலியைப்பற்றி இப்போ கவலைப் பட?”

"அப்போ உன் அபிப்பிராயத்தில் மஞ்சள் கயிறும் பூணுாலும் ஒரே எடையா?”

'இது பற்றி நாம் ஏ ன் சண்டை போடணும்' மதுரம் எரிந்து விழுந்தாள். இதுதான் வீட்டுக்குள்ளேயே ஊர் வம்பு என்கிறது. நல்லதோ பொல்லாதோ பாவ புண்ணியம் பார்க்கிறது அவர்கள் பாடு!"

'மதுரம் நாம் கொஞ்சம் கூட மாறவில்லை. தர்க்கத்தில் தோன் ஜயிக்கணும்னா இப்பவே சொல்லிடு,