பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忍

ஆனால் மழை பெய்தால் வானம் விண்டு கொள்ளும், வேனிலில் வெள்ளக்காடுதான். நனைந்த குருவிபோல். இந்தக் குடிசை மட்டும் ஜலத்தில் தனித்து கிற்கையில், பரிதாபமாகக் கூட இருக்கும்.

ஆனால், வெய்யில் தலைகாட்டியதும் என்குடிசை ராஜாத்திதான். பூமியின் ஒதமும், சூரிய ஒளியும் புதிதாய்க் கலக்கையில், குபிரென்று கிளம்பும் மண்ணின் ஆவியால் மணங்கமழ்கிறது. ‘என்னை ஆண்டு கொள்' என்று பூமி' சூரியனுக்குக் காட்டும் ஆராதனை, அர்ச்சனையில் வில்வ இலைகள் போல் புள்ளினங்கள் ஆகாயத்தில் பறந்து செல்வதே ஒரு கண்கொள்ளாக் காட்சி,

மண்டியிட்டு பூமியில் காதை வைத்துக் கேட்டால், அருவி கேட்கும். எங்கேயென நான் தேடிப் போனதில்லை. இங்குதான், இங்கோ, எங்கோ, எங்காயினும் தாவரங் களின் அடவியில் உள் பாவாடைக்குக் கட்டிய ஐரிகை போல் மடிமடியாய்ப் பாய்ந்து கொண்டிருக்கும். எந்த நதியிலிருந்து வழி தப்பிய ஸ்ன்னப் பிரிவோ? உர்ஸுக்குத் தான் தெரியும். தினம் காலையில் பானையில் அவள் எடுத்து வரும் கற்கண்டு தீர்த்தம் அதிலிருந்துதான். -

எனக்கும் சாயா நேரம் வந்தாச்சு. சேறு போல் காப்பிக் குடியனாக இருந்தவன் நானா இப்போ சாயா, கஞ்சி வெள்ளம்: கினைக்கத்தான் ஆச்சரியமாயிருக்கிறதே ஒழிய, கினைத்துப் பார்க்கின்-என்ன குறைஞ்சு போச்சு? இதுவும் ஒரு ருசிதான். ஆரோக்கியம் கூடித்தான் இருக் கிறது.

ஒன்று கண்டேன்; கண்டு கொண்டேயிருக்கிறேன். ஒரு பழக்க சூழ்நிலையிலிருந்து புதுசுக்கு மாறுவது-ஏற் றமோ தாழ்வோ-பரமபத சோபான படம் மாதிரி. மாறு வதற்கு மனதைத் திடம் பண்ணிக் கொள்ளும்வரை