பக்கம்:கோவூர் கிழார்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

என்னும் புலவர் அவ்வரசனுக்கு முதுகண் ஆனார். அதனால் அவரை யாவரும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்று சிறப்பித்து வழங்கத் தலைப்பட்டனர்.

இளைய வேந்தன் சோழ மண்டலத்தின் அரசுரிமையை ஏற்றான்; அவனுக்குரிய நல்லுரை வழங்கி, செய்யத் தக்கவை இன்னவை செய்யத்தகாதவை இன்னவை என்று அறிவுறுத்த முதுபெரும் புலவராகிய முதுகண்ணன் சாத்தனார் இருக்கிறார் என்ற செய்தி சோழநாட்டு மக்களுக்குத் தெரிந்தபோது, அவர்களுக்கு ஆட்சி இனிது நிகழும் என்ற நம்பிக்கை உண்டாயிற்று.

நலங்கிள்ளி தன் குலத்துக்கு ஏற்றபடி ஆண்மையிற் சிறந்தவனாக இருந்தான். மற்றவர்கள் அவனுக்கு முதுகண்ணாக இருந்தால் அவர்கள் அரசியலோடு தொடர்புடைய நுட்பங்களே மாத்திரம் அறிவுறுத்துவார்கள். ஆனால் முதுகண்ணன் சாத்தனார் பெரும் புலவரல்லவா? தமிழ் நூல்களை அவரிடம் நலங்கிள்ளி பயின்றான். பகைவரை வென்று பல நாடுகளை அடிப்படுத்தும் வேந்தனுடைய வீரம் சிறப்புடையதுதான். ஆனாலும் அந்த வீரத்தைப் பலரும் தெரிந்து கொள்ளும்படி புலவர்கள் பாடினால் வேந்தனுடைய புகழ் பரவும். புலவர் பாடும் புகழை உடைய மன்னர்களை வருங்கால மக்களுடைய பாராட்டுக்கு உரியவர்கள் என்ற உண்மையை நலங்கிள்ளி உணர்ந்தான். தமிழ் நயம் தேரும் ஊக்கம் அவனிடம் மிகுதி ஆக ஆகப் புலவர்களிடத்தில் அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/10&oldid=1089687" இலிருந்து மீள்விக்கப்பட்டது