பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். பருவத் துடிப்பது பள்ளிப் படிப்பில் உருவிடப் பாய்தல் உயர்வாம்; - திருவுடைத் தாய்மொழி யோடொரு தாழ்விலாப் பார்மொழி வாய்மொழி தோய்ந்திடல் வாக்கு. வாக்கிற் பணிவொடு, யாக்கைத் துணிவொடு நாக்கில் தமிழும் நயந்திட - நீக்கரும் ஏந்தல் இவ'னென ஏகாப் புகழதே ஏந்தும் இருகை எடுத்து. எடுத்த குரலும், மிடுக்கு நடையும், உடுத்த உடையில் ஒழுங்கும் - தொடுத்த படிப்பில் உயர்வும், பழக்கிற் பணிவும் கொடிப்பிற் செயலும் நுகர் ! நுகர்நேரம் பொன்போல் நுகர்ந்து, பகலோன் நிகர்பெருமை ஆசான் கிழலாய்ப் - பகலிற் படித்தவை கங்குலிற் பார்த்துப் படுத்து விடியற் பொழுதில் விழி! 115