பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் தட்டிப் பார்த்தேன். தமிழ்யாழ் இசைத்தது: "மட்டச் செப்பென மதித்தடித் தேனென வட்ட ஞாயிற்றின் வடிவினை உடையாள் விட்டனள் கம்பி ஒண்சக் கரம்போல், பொன்னை உருக்கிப் பொதித்த உடலினுள்; மின்னே எழுத்தாய்ப் பொறித்தனி பூண்டாள்; தன்னைப் பொற்கா செனவுங் கூறினாள்: என்னை மயக்கி ஏகிய வஞ்சியைக், கண்டா லன்பரீர், கடைக்கண் விடாது கொண்டுவர் தென்யால் கொடுப்பீர்; அன்றிக் கண்டதுங் காதலால் கட்டி யணைப்பிரேல், விண்டவென் கிலையில் நீர் வீழ்வது திண்ணமே ! (கலி விருத்தங்கள்.) 134