பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். "தொடுதொடுபோ வானத்தைத் தொட்டுவிட்டு வாவென்றே நூலை, விடுவிடென விட்டுயர்த்தி விண்ணவென்ற சிரிப்பெடுத்து நின்றன். (நெடிலடி ஆசிரிய விருத்தங்கள். ) அண்ணன் அப்போ தங்கே வந்தோன், தம்பியிடம் "என்னே உன்றன் இன்பம் எண்ணி வண்டதனைக் கொன்னே கொல்வாய் கூடா தேடா விடுவென்றன். பின்னேன் மீற, முன்னேன் இல்லம் புகுந்தனனே. - (கலித்துறை.) வீட்டினுள் தங்தை விளைத்த சினத்தை வெடிக்கவிட்டுக் 'கேட்டியோ, தங்கை கெடுநிலை; கேடன் எவனுடனே நீட்டினள் கம்பி; நிறைபழி பெற்றேன்: தமிழ்பயின்றேன்: ஊட்டின கன்றே. உதைத்தென ஆயினன்' என்றனரே. - (கட்டளைக் கலித்துறை.) 139