பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் தொல்காப் பியமென்னுக் தமிழ்வரம்புத் தொன்னூற்கு நல்லுரைகள் முன்னிருக்க நச்சினர்க் கினியனெனும் பொல்லாத ஒருபுலவன் புகுந்திட்டே உரையெழுதி, இல்லாத புகுத்தமைத்தே இழிவளித்தான் தமிழர்க்கே. நல்லொழுக்கம், நற்பண்பு, நாகரிகம், வாழ்வகையைச் சொல்வித்த பொய்யாத சொத்தென்னும் குறள் தனக்கே வல்விலங்காம் வடமொழியின் வழிகொண்டே உரையெழுதிக் கொல்வித்தான் தமிழ்ப்பண்பைக் கொடும்பரிமே லழகனென்பான். 46