பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் பல்லிதழ்கொள் மலர்களிங்கு மலர்ந்தே பரந்திருக்க வெண்மையிலே, அலர்ந்த மல்லிகையாம் மலரொன்றே தனியாய் மணச்சிறப்பைப் பெற்றதற்கென் பொருளோ ? பல்லுருவில் மக்களிங்கு மிகுவர்: பயனற்ற வாழ்வதனைப் புரிவர்: நல்லிசையைப் பெறுவதற்கே அணியாய் கனிவேண்டும் பண்பெனுமோர் குறியாம் ! பல்வகையாய் மரமெல்லாம் இனிமைப் பயன்தந்து நிற்குங்கால், ஒளிகொள் பல்லுக்கே வல்.ஆலம் இரண்டும் பயனுறுதி என்பதற்கென் பொருளேர் : வெல்லுவதே தன்மையெனப் பெரிதாய் வெறிவாழ்வு கண்டாலும், இனிதாம் சொல்லுக்குள் உண்மையினை நிறைவாய்ச் சொரிந்துகிற்க வேண்டுவதன் குறியாம்! 86